தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பெண் இன்ஸ்.,சுக்கு கட்டாய பணி ஓய்வு

பெண் இன்ஸ்.,சுக்கு கட்டாய பணி ஓய்வு

பெண் இன்ஸ்.,சுக்கு கட்டாய பணி ஓய்வு

1


UPDATED : நவ 15, 2026 10:28 PM

ADDED : நவ 15, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 10:28 PM ADDED : நவ 15, 2026 09:40 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:பிளஸ் 2 மாணவி கொலை விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரவீனா, 49, என்பவருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அப்போதைய விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சில மாதங்களுக்கு பின், அவருக்கு கன்னியாகுமாரி மாவட்டத்தில் பணி வழங்கப்பட்டது. மாணவி கொலை தொடர்பாக தர்ம முனீஸ்வரன், 37, என்பவர் கைது செய்யப்பட்டு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், மதுரை சிறையில் அவர் உள்ளார்.

மாணவி கொலை விவகாரத்தில் புகார் அளித்தும், வழக்கு பதியாமல் அலட்சியமாக செயல்பட்ட பிரவீனாவுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு, நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us