/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மாஸ்டர் பிளானுக்கு 'கிரெடாய்' அமைப்பு வரவேற்பு
/
துாத்துக்குடி மாஸ்டர் பிளானுக்கு 'கிரெடாய்' அமைப்பு வரவேற்பு
துாத்துக்குடி மாஸ்டர் பிளானுக்கு 'கிரெடாய்' அமைப்பு வரவேற்பு
துாத்துக்குடி மாஸ்டர் பிளானுக்கு 'கிரெடாய்' அமைப்பு வரவேற்பு
ADDED : மார் 07, 2026 02:20 AM
சென்னை: துாத்துக்குடிக்கு புதிய மாஸ்டர் பிளான் வெளியிட்டதற்கு, இந்திய ரிய ல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் தமிழக பிரிவு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கிரெடாய் தமிழக பிரிவு தலைவர் டபிள்யு.எஸ். ஹபீப் வெளியிட்ட அறிக்கை:
துாத்துக்குடி நகரின் வளர்ச்சியை கருத்தில் வைத்து, 2045 வரையிலான காலத்துக்கு புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி நகரை முன்னோக்கி திட்டமிடும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
வலுவான தொழில்துறை அடித்தளம், துறைமுகம் போன்ற காரணங்களால் துாத்துக்குடி, தமிழகத்தின் முக்கிய வளர்ச்சி மையமாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் முதலீடுகள், நகர விரிவாக்கம் ஆகியவற்றை கருத்தில் வைத்து புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், துாத்துக்குடிக்கான நகர்ப்புற திட்டமிடல் பணிகள் தெளிவான நிலையை எட்டும். இதை வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.