/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
2 ஆண்டிற்கு மேல் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யவில்லை :மக்கள் குறைதீர்க்கும் நாளில் கடும் புகார்

ADDED : ஆக 24, 2011 02:45 AM
தூத்துக்குடி : இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுத்தம் செய்யாமல் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து டி.ஆர்.ஓவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடியை அடுத்த அத்திமரப்பட்டி ஊராட்சி கக்கன்ஜிநகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக் கொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் டி.ஆர்.ஓ அமிர்தஜோதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; எங்கள் பகுதி முழுவதும் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் தொட்டியில் பாசம் உள்ளிட்டவை படிந்து தண்ணீர் மோசமான நிலையில் வந்து கொண்டிருக்கிறது. வேறு வழியில்லாமல் அதனை குடிக்க வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவிளக்குகள் சரியாக இல்லாததால் மக்கள் இருட்டில் பயந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கழிவு நீர் செல்வதற்கு முடியாமல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிடோர் நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடிப்படை வசதி இல்லாமல் திணறும் எங்கள் கிராமத்திற்கு கலெக்டர் விசிட் செய்து உண்மை நிலையை அறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.