/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் சமக., தனித்து போட்டியிட முடிவு
/
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் சமக., தனித்து போட்டியிட முடிவு
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் சமக., தனித்து போட்டியிட முடிவு
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் சமக., தனித்து போட்டியிட முடிவு
ADDED : செப் 23, 2011 01:00 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் சமக.,வினர் தனித்து
போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக சமக., கட்சி நிர்வாகிகள்
மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு படிவங்களை திரண்டு வந்து வாங்கி
சென்றனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக., தனது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை
ஒதுக்காமல் தேர்தல் போட்டியிடுபவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதனால் சட்டசபை தேர்தலின் போது அதிமுக., கூட்டணியில் இருந்த கட்சிகள்
எல்லாம் அதிர்ச்சி அடைந்து அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி
வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவியை பெறலாம் என்று
எதிர்பார்த்து காத்திருந்த தூத்துக்குடி மாவட்ட சமக.,வினர் அதிமுகவின்
இந்த செயல்பாட்டினை கண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு
செய்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர சமக., செயலாளர் அற்புதராஜ்,
மாவட்ட துணைச் செயலாளர் மலர்விழி,மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வில்சன்,
மகளிர் அணிச் செயலாளர் முத்துமதி, மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன், வர்த்தகரணி
செயலாளர் பிரபாகர், தொண்டரணி செயலாளர் குமார், கலை இலக்கிய அணிச் செயலாளர்
சரத்பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று காலையில்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு திரண்டு வந்தனர்.அவர்கள் மேயர் மற்றும் 60
வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனு படிவங்களை
வாங்கிச் சென்றனர். கட்சி தலைமை செல்லும் தேதியில் தங்களது வேட்புமனுக்களை
தாக்கல் செய்ய உள்ளதாக சமக., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.