sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உடன்குடி அருகே பெண் அடித்து கொலை..?போலீசார் தீவிர விசாரணை

/

உடன்குடி அருகே பெண் அடித்து கொலை..?போலீசார் தீவிர விசாரணை

உடன்குடி அருகே பெண் அடித்து கொலை..?போலீசார் தீவிர விசாரணை

உடன்குடி அருகே பெண் அடித்து கொலை..?போலீசார் தீவிர விசாரணை


ADDED : அக் 11, 2011 02:18 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடன்குடி : உடன்குடி அருகே வெள்ளாளன்விளையில் பெண் ஒருவர் கழுத்து தலைப்பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; உடன்குடி அருகே சீயோன்நகரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி செல்வக்கனி(57). இவருக்கு இரண்டு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவர் கடந்த அக்.6ம் தேதி குலசை தசரா திருவிழாவிற்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பாததால் உறவினர்கள் வீடுகளில் தேடிவந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளாளன்விளையில் உள்ள ஒரு தோட்டத்தில் செல்வக்கனி கழுத்து தலையில் மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதை அந்தப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து போலீசில் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இட த்திற்கு விரைந்து வந்த மெஞ்ஞானபுரம் போலீசார் செல் வக்கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக “அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர். செல்வக்கனியை முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் இறந்தது எப்படி என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us