/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மது குடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை
/
மது குடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை
மது குடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை
மது குடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டி அடித்துக்கொலை
ADDED : ஜன 05, 2026 05:46 AM
துாத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, குடிபோதையில் அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கிளாக்குளத்தை சேர்ந்தவர் முத்தம்மாள், 81; கணவரை இழந்த முத்தம்மாள், வீட்டில் தனியாக வசித்தார். அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, 21, என்பவர், அடிக்கடி அப்பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளார்.
சில நாட் களுக்கு முன், அருண்பாண்டியின் தாய் இறந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, முத்தம்மாள் வீட்டின் முன் அமர்ந்து, அருண்பாண்டி மது குடித்துள்ளார். அவரை முத்தம்மாள் கண்டித்தார்.
ஆத்திரமடைந்த அருண்பாண்டி, வீட்டின் முன் கிடந்த பிளாஸ்டிக் துடைப்பத்தால் முத்தம்மாளை தாக்கிவிட்டு தப்பியோடினார்.
இதில் மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். செய்துங்கநல்லுார் போலீசார், அருண்பாண்டியை நேற்று கைது செய்தனர்.

