/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடப்பட்ட ஐந்தே நாளில் முறிந்து விழுந்த மின்கம்பம்
/
நடப்பட்ட ஐந்தே நாளில் முறிந்து விழுந்த மின்கம்பம்
ADDED : ஜூன் 26, 2025 02:24 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ஸ்ரீராம் நகர் 3வது தெருவில் சேதமடைந்த மின்கம்பத்திற்கு மாற்றாக, 21ம் தேதி புதிதாக மின்கம்பம் நடப்பட்டது.
மின் ஒயர்களை இணைக்க தயாராக இருந்த நிலையில், நேற்று காலை திடீரென அந்த கம்பம் அடிப்பகுதியில் முறிந்து விழுந்தது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ லேசான சேதமடைந்தது. ஆட்டோ டிரைவர் பேச்சியான் காயத்துடன் தப்பினார். மின்கம்பம் விழுந்த பகுதியில் தனியார் பள்ளி, நகர் நல மையம், ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளன. தினமும் காலை, பள்ளிக் குழந்தைகள் அந்த இடத்தில் இருந்தே வாகனங்களில் ஏறி செல்வது வழக்கம்.
அவர்கள் சென்றபின் மின்கம்பம் முறிந்து விழுந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த மின்கம்பத்தை விட, தற்போது நடப்பட்ட மின்கம்பம் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.