ADDED : அக் 12, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம்
அருகே தெற்கு கோவங்காடை சேர்ந்தவர் செல்வகுமார், 50. நேற்று முன்தினம் இரவு, பழையகாயலில் இருந்து கோவங்காடு செல்லும் வழியாக பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, அவரை மறித்து தகராறு செய்த மூன்று பேர், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற செல்வகுமார், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
ஆத்துார் போலீசார் விசாரணையில், செல்வகுமாருக்கும், உறவினர்கள் சிலருக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரிந்தது.