/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கொசு மருந்து குடித்த நான்கு மாணவியர் 'அட்மிட்'
/
கொசு மருந்து குடித்த நான்கு மாணவியர் 'அட்மிட்'
ADDED : செப் 22, 2024 02:15 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில், காலாண்டு தமிழ் தேர்வில் சில மாணவியர், 'பிட்' அடித்து எழுதியதால் ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியர் நான்கு பேர் அய்யனேரி பஸ் ஸ்டாப் அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பில் கொசு மருந்து லிக்யூட் வாங்கி, மறைவான இடத்துக்கு சென்று குடித்துள்ளனர்.
சற்று நேரத்தில் அவர்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன மாணவி கன்ஷிகா தாயிடம் நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நான்கு மாணவியரும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.