/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடுரோட்டில் பழுதாகும் அரசு பஸ்கள் பராமரிப்பு இல்லை; பயணியர் தவிப்பு

ADDED : ஆக 03, 2025 08:26 AM

துாத்துக்குடி : தமிழகத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே அரசு பஸ்கள் பழுதாகி இடையில் நிற்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து, முடுக்கலான்குளம் கிராமத்திற்கு பயணியரை ஏற்றிக் கொண்டு, நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பஸ்சில், 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கோவில்பட்டி மாதங்கோவில் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, திடீரென, 'கியர் ராடு' வேலை செய்யாமல் நடுரோட்டில் பழுதாகி நின்றது.
டிரைவர் பழுதைசரி செய்ய முயன்றும் முடியவில்லை. பயணியர் அனைவரும் கீழே இறங்கி, காத்திருந்து அவதியடைந்தனர். பின், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடுரோட்டில் நின்ற பஸ்சை டிரைவர், நடத்துனர் மற்றும் அப்பகுதியினர் உதவியுடன் தள்ளி, ஓரமாக விட முயன்றனர். முடியாததால் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கிருந்து வந்த மெக்கானிக், பஸ் பழுதை நீக்கினார். ஒரு மணி நேரத்திற்கு பின், போக்குவரத்து பணிமனைக்கு, பஸ் கொண்டு செல்லப்பட்டது.