ADDED : ஜூன் 20, 2026 11:07 PM

துாத்துக்குடி: வடமாநில தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், நால்வரை போலீசார் கைது செ ய்தனர்.
துாத்துக்குடி, சில்லாநத்தம் பகுதியில் இயங்கும் 'வின்பாஸ்ட்' மின் வாகன தொழிற்சாலையில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரிந்த, பீஹாரை சேர்ந்த ராஜேஷ்குமார் சிங், 49, உள்ளூரை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு, மது அருந்தினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், ராஜேஷ்குமார் சிங்கை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பினர். நேற்று காலை, தென்பாகம் போலீசார், ராஜேஷ்குமார் சிங் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கொலை நடந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், சிவா, 24, ஜேம்ஸ், 23, பூமிநாதன், 25, கசாலி, 26 ஆகிய நால்வரை கைது செய்தனர்.
