/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
/
வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
ADDED : ஜன 07, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம் நல்லமருதம்பட்டியை சேர்ந்த செந்தில் வேல் 40, ராமமூர்த்தி 43, ஆகியோர் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். மதுரை -- -துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாலசமுத்திரம் அருகே பின்னால் வந்த வேன் இருவர் மீதும் மோதியதில் பலத்த காயமடைந்தனர். இதில் செந்தில்வேல் இறந்தார்.
ராமமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். வேன் டிரைவர் வேப்பலோடை அரிச்சந்திரனை, ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.