ADDED : அக் 29, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜ்நகரில் அரசு மதுபானக்கடை எண்: 10144, கடந்த 2020 முதல் செயல்படுகிறது.
பெண்களுக்கு இடையூறாக உள்ள அக்கடை மற்றும் அருகேயுள்ள பார் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சேர்வைக்காரன்மடம் பஞ். துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தலைமையில், அப்பகுதி பெண்கள் கலெக்டர் இளம்பகவத்திடம் நேற்று மனு அளித்தனர்.