/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரயிலில் ஏறி 'ரீல்ஸ்' : மாணவர் உயிரிழப்பு
/
ரயிலில் ஏறி 'ரீல்ஸ்' : மாணவர் உயிரிழப்பு
ADDED : நவ 03, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், அண்ணாநகரை சேர்ந்த நீதிதாசன் மகன் அருண்குமார், 18. தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
நண்பர்களான ஹரீஷ், 17, பத்தாம் வகுப்பு மாணவர் கவின், 16, ஆகியோருடன் நேற்று மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏறி, மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
அப்போது, உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அருண்குமார் உயிரிழந்தார். நண்பர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். சிப்காட் மற்றும் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

