/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண் சடலத்தில் இருந்த செயினை திருடிய உறவினர்
/
பெண் சடலத்தில் இருந்த செயினை திருடிய உறவினர்
ADDED : மார் 16, 2025 12:55 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரலை சேர்ந்த தொழிலாளி முரசொலிமாறன் மனைவி மகேஸ்வரி, 31. உடல்நலக் குறைவால் 12ம் தேதி இறந்தார். 13ம் தேதி மகேஸ்வரி உடலுக்கு இறுதிச் சடங்கு நடந்தது.
உடலை அடக்கம் செய்தபோது, கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க தாலிச்செயின் மாயமானது தெரியவந்தது. மஞ்சள் கயிறில் முரசொலி மாறன் தாலி கட்டியபின், மகேஸ்வரி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, ஏரல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஏரல், கணபதிசமுத்திரத்தைச் சேர்ந்த கொழுந்துவேல், 38, நகையை திருடியது தெரியவந்தது.
நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், 5 சவரன் தாலிச்செயினை மீட்டனர்.