/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு

UPDATED : ஜூலை 02, 2024 01:31 PM
ADDED : ஜூலை 02, 2024 12:10 PM

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான டெண்டர் இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டது.
இஸ்ரோவுக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் 'சதீஷ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் 2வது ஏவுதளம் அமைக்க, தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில், 2,233 ஏக்கரில் இஸ்ரோ இடம் தேர்வு செய்தது. சமீபத்தில் அங்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான டெண்டர் இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டது. அதில், ரூ. 20.29 கோடி மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப சேவை கட்டடம், ஏவுதள தீயணைப்பு நிலையம் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 22ம் தேதி 2.30 மணி வரை ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.