ADDED : பிப் 14, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:சென்னையில் இருந்து துாத்துக்குடி வந்த விமானத்தில், பயணத்தின்போது, துாத்துக்குடியைச் சேர்ந்த வில்சன் மதுரம் என்பவர் பைபிளை கையில் வைத்துக்கொண்டு மத பிரசாரத்தில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.
ஜன., 27ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பிரசாரத்தின்போது சக பயணியர் முகம் சுளித்தும், விமான ஊழியர்கள் கண்டு கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

