/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பட்டியலின மாணவியிடம் எஸ்.சி., ஆணையம் விசாரணை
/
பட்டியலின மாணவியிடம் எஸ்.சி., ஆணையம் விசாரணை
ADDED : பிப் 19, 2025 12:49 AM

கோவில்பட்:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தியான் ஹெல்த் எஜுகேஷன் என்ற மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான கல்வி நிறுவனத்தில், நயினாம்பட்டியை சேர்ந்த பட்டியலின மாணவி மாலா வினோதினி, 20, சக மாணவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதை விசாரித்த கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரியா, மாலா வினோதினியை, சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் கிருஷ்ணபிரியா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது, அவர் தலைமறைவாக உள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், கோவில்பட்டியில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். டி.ஆர்.ஓ., ரவிச்சந்திரன், துாத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

