/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பள்ளி தேக்கு கட்டை மாயம் 'மாஜி' தலைவர் மீது புகார்
/
பள்ளி தேக்கு கட்டை மாயம் 'மாஜி' தலைவர் மீது புகார்
பள்ளி தேக்கு கட்டை மாயம் 'மாஜி' தலைவர் மீது புகார்
பள்ளி தேக்கு கட்டை மாயம் 'மாஜி' தலைவர் மீது புகார்
ADDED : பிப் 17, 2025 01:04 AM

கோவில்பட்டி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி ஊராட்சி துவக்கப் பள்ளியில், 2023ல் பழைய கட்டட கூரை இடிந்தது. இதனால் புதிய கட்டடம் கட்டப்பட்டது. பழைய கட்டடத்தின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 52 தேக்கு மரக்கட்டைகள், மூன்று இரும்பு துாண்கள் மற்றும் இரும்பு பொருட்கள் திடீரென மாயமாகின. அதிகாரிகள் அனுமதியின்றி, கட்டடத்தை அப்புறப்படுத்துவதாக சிலர் அந்த பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சிதம்பரம்பட்டி பஞ்., முன்னாள் தலைவர் ஜானகி ராமசாமி கட்டிய புது வீட்டில், அந்த தேக்கு மரங்களை பயன்படுத்தி விட்டதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, கிராம மக்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, நாலாட்டின்புதுார் போலீசார், கிராம மக்களிடமும், யூனியன் அதிகாரிகள் மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் தரப்பிடமும் விசாரிக்கின்றனர். கலெக்டர் விசாரித்தால் உண்மை வெளிவரும் என, மக்கள் தெரிவித்துள்ளனர்.