/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு கோழியுடன் சென்ற விவசாயி
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு கோழியுடன் சென்ற விவசாயி
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு கோழியுடன் சென்ற விவசாயி
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு கோழியுடன் சென்ற விவசாயி
ADDED : நவ 27, 2025 01:51 AM
துாத்துக்குடி: சார் - பதிவாளர்அலுவலகத்திற்கு கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என கூறி, கோழி, தவிடு, பிண்ணாக்குடன் மனு அளிக்க சென்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம், அதே பகுதியில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் அந்த நிலம், ஸ்பீடு பூமி புரோமோட்டர்ஸ் என்ற தனியார் சோலார் நிறுவனத்தின் பெயருக்கு பத்திர பதிவு செய்யப்பட்டது.
ஆவணங்கள் தன்னிடம் இருக்கும்போது, நிலத்தை தனியார் சோலார் நிறுவனத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது எப்படி என விசாரிக்க, கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் அளித்தார்.
மேலும், சோலார் நிறுவனத்திடம் பணம் பெற்று, இந்த முறைகேட்டில், சார் - பதிவாளர் அலுவலகத்தினர் ஈடுபட்டனர் என கோவிந்தராஜ் புகார் கூறினார்.
இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என கூறிய கோவிந்தராஜ், வீட்டில் உள்ள கோழி, தவிடு, பிண்ணாக்கு ஆகியவற்றை தலையில் வைத்து கொண்டு, மேள தாளம் முழங்க, நேற்று கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விவசாயி கோவிந்த ராஜை மனு அளிக்க வைத்தனர்.

