/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முத்துநகர் எக்ஸ்பிரஸ் மீது சரமாரி கல்வீச்சு: விசாரணை
/
முத்துநகர் எக்ஸ்பிரஸ் மீது சரமாரி கல்வீச்சு: விசாரணை
முத்துநகர் எக்ஸ்பிரஸ் மீது சரமாரி கல்வீச்சு: விசாரணை
முத்துநகர் எக்ஸ்பிரஸ் மீது சரமாரி கல்வீச்சு: விசாரணை
ADDED : பிப் 08, 2024 02:08 AM
துாத்துக்குடி,:துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 8:20 மணிக்கு புறப்பட்டது.
துாத்துக்குடி மேலுாரை அடுத்த சின்னகண்ணுபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் ரயிலில் 'ஏசி' பெட்டி மீது சரமாரியாக கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் கண்ணாடி சேதமுற்றது; பயணியர் யாருக்கும் காயமில்லை; ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த 'வந்தே பாரத்' ரயில் மீது கங்கைகொண்டான் அருகே ஒரு கும்பல் கல் வீசியது. தொடர்ந்து ரயில்கள் மீது நடக்கும் கல்வீச்சு குற்றங்கள் குறித்து ரயில்வே போலீசார், மாணவர்கள் சிலரை பிடித்து விசாரிக்கின்றனர்.