/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
/
பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
ADDED : நவ 23, 2025 02:14 AM

கோவில்பட்டி: பிளஸ் 2 மாணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நிலா நகரை சேர்ந்த பழனிவேல் மகன் தருண்ராஜ், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வெகுநேரமாக தருண்ராஜ் மொபைல் போனில் பேசியபடி இருந்துள்ளார். அவரை கண்டித்த பெற்றோர் துாங்க செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை தருண்ராஜ் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர்.
பெத்தேல் ரயில்வே தண்டவாளம் அருகே தருண்ராஜ் சடலமாக கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரணையில், பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த தருண்ராஜ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கிடையே, அவரது உடலில் காயங்கள் இருப்பதாக, பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

