/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போலீசாரை கண்டித்து மாணவி போராட்டம்
/
போலீசாரை கண்டித்து மாணவி போராட்டம்
ADDED : ஜன 25, 2025 01:57 AM

துாத்துக்குடி:கோவில்பட்டியில் மாணவி ஒருவர், மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் ஏறி, தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார் டிரைவரான இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் கார் வாங்கிய கடன் தொடர்பாக பிரச்னை உள்ளது.
இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர்; போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, கார்த்திகேயன் மகளான, பிளஸ் 1 மாணவி தன்யா, 17, நேற்று காலை, அந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
கோவில்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தன்யாவிடம் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், அவரை மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து கீழே இறக்கி, விசாரிக்கின்றனர்.

