/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தரமற்ற வீடு: கான்ட்ராக்டர் இழப்பீடு வழங்க உத்தரவு
/
தரமற்ற வீடு: கான்ட்ராக்டர் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 26, 2024 04:37 AM
துாத்துக்குடி : துாத்துக்குடியைச் சேர்ந்த ஜோதிமணி, 54, என்பவர் கான்ட்ராக்டர் ஒருவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்திருந்தார். வீட்டுக்கான முழுத்தொகையையும் செலுத்தி இருந்தார்.
எனினும், கான்ட்ராக்டர் ஒப்பந்தத்தில் கூறியபடி தரமான சிமென்ட் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தவில்லை என தெரிய வந்தது.
கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால், வீடு பாதுகாப்பாக இல்லை என சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டரிடம் ஜோதிமணி புகார் தெரிவித்தார்.
அவர் முறையான பதில் தெரிவிக்காததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜோதிமணி வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த, ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் கான்ட்ராக்டரின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டினர். பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து பெற்ற, 18 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.
மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாய் என, 19 லட்சம் ரூபாயை, இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என கான்ட்ராக்டருக்கு அவர்கள்உத்தரவிட்டனர்.

