/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருநாவுக்கரசர் ஆவணங்கள் பட்டினமருதுாரில் கண்டெடுப்பு
/
திருநாவுக்கரசர் ஆவணங்கள் பட்டினமருதுாரில் கண்டெடுப்பு
திருநாவுக்கரசர் ஆவணங்கள் பட்டினமருதுாரில் கண்டெடுப்பு
திருநாவுக்கரசர் ஆவணங்கள் பட்டினமருதுாரில் கண்டெடுப்பு
ADDED : ஜன 01, 2026 06:19 AM
துாத்துக்குடி: பட்டினமருதுார் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தொடர்பான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
துாத்துக்குடி மாவட்டம், பட்டினமருதுார் பகுதியில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக, தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி என்பவர் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், 'வடக்கு கல்மேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில், நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் இடப்பக்க கையில் உழவாரக் கருவியும், வலப்பக்கம் சருகுகளை திரட்டும் முள் தடி போன்ற குறியீடுகளுடன் ஆவணங்கள் கிடைத்துள்ளன' என, தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பகுதியில் மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்ய வேண்டும் என, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார் என்ற தகவலையும் அவர் கூறினார்.