sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உள்ளாட்சி தேர்தலுக்கு 228 வாக்குச்சாவடி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

/

உள்ளாட்சி தேர்தலுக்கு 228 வாக்குச்சாவடி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

உள்ளாட்சி தேர்தலுக்கு 228 வாக்குச்சாவடி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

உள்ளாட்சி தேர்தலுக்கு 228 வாக்குச்சாவடி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்


ADDED : செப் 10, 2011 03:44 AM

Google News

ADDED : செப் 10, 2011 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 228 வாக்குச்சாவடி பட்டியலுக்கு நேற்று மாநகராட்சி அவசர கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி பட்டியல்களை மன்ற கூட்டங்களில் வைத்து பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியும் அமையும் இடம், அந்த கட்டடம் வாடகை கட்டடமா, சொந்த கட்டடமா என்பது குறித்த 228 வாக்குச்சாவடி அடங்கிய பட்டியலை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி மாகராட்சி அவசர கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் சரவணன், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியானது எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மொத்தம் 60 வார்டுகளாக மறுவறை செய்யப்பட்டுள்ளது. தற்போது நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 228 வாக்குச்சாவடி இந்தெந்த இடங்களில் அமைக்கப்படுகிறது என்கிற தீர்மானத்தை மேயர் கிளார்க் துரைமணி வாசித்தார். உடனடியாக மன்றத்தில் வாக்குச்சாவடி பட்டியல் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு நிமிடத்தில் கூட்டம் முடிந்தது. வரும் 14ம் தேதிக்கு முன்பாக ஒரு கூட்டம் நடக்க உள்ளது. அது தான் தற்போதைய மாமன்றத்தின் கடைசி கூட்டமாகும்.






      Dinamalar
      Follow us