/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர் மூவர் பலி
/
மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர் மூவர் பலி
மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர் மூவர் பலி
மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர் மூவர் பலி
ADDED : நவ 20, 2025 02:47 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே மரத்தில் கார் மோதியதில் பயிற்சி டாக்டர்கள் மூவர் உயிரிழந்தனர்.
துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும், கோவை பி.என்.புதுாரை சேர்ந்த பயிற்சி டாக்டர் சாரூபன், 23, என்பவர் துாத்துக்குடி பிரையன்ட்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
அவருக்கு சொந்தமான, 'வோக்ஸ் வோகன் வென்டோ' காரில் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, பயிற்சி டாக்டர்களான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியான், 23; திருப்பத்துார் மாவட்டம், மந்தைவெளியை சேர்ந்த முகிலன், 23, மற்றும் சரண், 24; துாத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்த ஹிருத்திக் குமார், 23, ஆகியோர் வெளியே சென்றனர்.
மழை பெய்து கொண்டிருந்ததால், தெற்கு கடற்கரை சாலைக்கு காரில் சென்றனர். திடீரென அதிவேகமாக சென்ற கார், நிலை தடுமாறியதில் சாலையோர வேப்பமரத்தில் மோதியது.
தகவலின்படி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் காரில் சிக்கியவர்களை மீட்டனர். சாரூபன், ராகுல் ஜெபஸ்டியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முகிலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். பயிற்சி டாக்டர்களான சரண், ஹிருத்திக் குமார் ஆகியோர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தென்பாகம் போலீசார், இந்த விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

