sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி

/

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவது எப்படி


ADDED : அக் 08, 2011 01:48 AM

Google News

ADDED : அக் 08, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தான்குளம் : உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டுப் போட எப்படி விண்ணப்பிப்பது என சரியான வழிகாட்டி முறை தெரியாததால் குழப்பமடைந்துள்ளனர்.உடனடியாக தபால் வாக்குகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெளிவான சுற்றறிக்கை மூலம் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதில் தேர்தல் நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டுக்கள் வழங்கப்படும். இதற்காக படிவம் எண் 15 என்ற பாரத்தை நிரப்பி தேர்தல் பணி ஆணையின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும். அந்தப் படிவத்தில் எந்த வாக்குச் சாவடியில் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். 10ம் தேதி நடக்கும் தேர்தல் வகுப்பில் தான் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எந்த வாக்குச்சாவடி என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட யூனியன், டவுன் பஞ்., அலுவலகத்திற்கு வழங்க வேண்டும். அதன் பிறகு வாக்குச்சீட்டு அந்தந்த ஆசிரியர்கள் முகவரிக்கு தபால் மூலம் வழங்கப்படும். இதில் காலதாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் கிராமப் பஞ்.,ல் வாக்காளர்களாக உள்ளவர்கள் 4ஓட்டும், நகரப் பகுதி டவுன் பஞ்., மாநகராட்சி பகுதிக்கு 2 ஓட்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு ஓட்டுக்கும் தனித்னியாக விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பங்கள் அட்டஸ்ட் செய்து கொடுக்கப்பட வேண்டும். எந்த தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் தேர்தல் அதிகாரிகளால் தெளிவாக கூற முடியவில்லை. இதனால் தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக மாறவாய்ப்புள்ளது. மாநில தேர்தல் ஆணையம் முறையான சுற்றறிக்கையை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உடனே அனுப்ப வேண்டும்.இதன் மூலம் தேர்தல் பணியில் போதிய முன் அனுபவமின்றி பணியாற்றும் வளர்ச்சிப் பிரிவு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு சரியான விளக்கமளிக்க முடியும். இதன் மூலம் செல்லாத ஓட்டுகள் பதிவாகாமல் தடுக்க முடியும் என ஆசிரியர்கள் கூறினர். வருவாய்த்துறையினர் அளவிற்கு வளர்ச்சிப் பிரிவினருக்கு தேர்தல் நடத்திய அனுபவம் இல்லாததாலும், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு போதிய பயிற்சிகளை அந்த துறையினருக்கு வழங்காத தேர்தல் ஆணையமும் தான் இத்தனை குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.








      Dinamalar
      Follow us