sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பறக்கும்படை குழுக்கள் அ

/

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பறக்கும்படை குழுக்கள் அ

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பறக்கும்படை குழுக்கள் அ

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பறக்கும்படை குழுக்கள் அ


ADDED : அக் 08, 2011 01:48 AM

Google News

ADDED : அக் 08, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 16 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் குறித்து இவர்களிடம் தகவல் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தேர்தல் ஆணைய தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது; தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு பறக்கும்படை வீதம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 12 பறக்கும்படைகளும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு 2 பறக்கும்படைகளும், கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு ஒரு பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும்படை என்று மொத்தம் 16 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பறக்கும்படையில் ஒரு துணை தாசில்தார் தலைமையில் ஒரு வருவாய் ஆய்வாளர், ஒரு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் குழுவாக இடம் பெற்றிருப்பர்.இவர்கள் மாவட்டம் முழுவதும் தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிப்பர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகள் மற்றும் புகார்களை இவர்களிடம் கீண்கண்ட செல்போன் எண்களில் தெரிவிக்கலாம்.தூத்துக்குடி மாநகராட்சி 1 முதல் 30 வார்டிற்கு தூத்துக்குடி தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் சாந்தகுமார் பறக்கும்படை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9443528303, போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார். இவரது செல் போன் எண் 8903726274. தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண் 31 முதல் 60 வரையுள்ள வார்டிற்கு தூத்துக்குடி மண்டல துணைத் தாசில்தார் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9488282649, போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தங்கராஜ் செல்போன் எண் 9894556955.கோவில்பட்டி நகராட்சிக்கு பறக்கும்படை அலுவலராக கோவில்பட்டி மண்டல துணை தாசில்தார் குருநாதனம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9442444990. கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராதாமணி செல்போன் எண் 9442148994. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு ஸ்ரீவைகுண்டம் மண்டல துணைத் தாசில்தார் ராமச்சந்திரன் பறக்கும்படை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 7598473084. போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ் செல்போன் எண் 9942477194.கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பறக்கும்படை அலுவலராக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் நீலமேகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செல்போன் எண் 9445000372. செய்துங்கநல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேலுகந்தபெருமாள் செல்போன் எண் 9442804653.ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக ஸ்ரீவைகுண்டம் மண்டல துணைத் தாசில்தார் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9488424669. ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி செல்போன் எண் 9486585592. ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் செல்வபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9445000373. ஆழ்வார்திருநகரி போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முருகன் செல்போன் எண் 9487708912.திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக திருச்செந்தூர் மண்டல துணைத் தாசில்தார் ரகு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9445031359. போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கணேசன் செல்போன் எண் 9976884587. உடன்குடி ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக சாத்தான்குளம் தேர்தல் துணைத் தாசில்தார் தில்லைப்பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 8903681425. குலசேகரப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ் செல்போன் எண் 9865458988.சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக சாத்தான்குளம் மண்டல துணைத் தாசில்தார் சூரியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9442061447. தட்டார்மடம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்சேகர் செல்போன் எண் 9443529176. கயத்தார் ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார் தங்கசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9445000375. கழுகுமலை போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முத்து செல்போன் எண் 9443528786. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9445000377. கோவில்பட்டி மேற்கு போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் செல்போன் எண் 9940951219.விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பறக்கும்படை அலுவலராக விளாத்திகுளம் தேர்தல் துணைத் தாசில்தார் ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9442444962. விளாத்திகுளம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் செல்போன் எண் 9003554014.புதூர் ஊராட்சி ஒன்றிய பறக்குப்படை அலுவலராக விளாத்திகுளம் மண்டல துணைத் தாசில்தார் ராமசுப்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9487892397. சங்கரலிங்கபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கண்ணையா செல்போன் எண் 9487839498.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேற்கு (1 முதல் 30 ஊராட்சிகள்) பறக்கும்படை அலுவலராக ஓட்டப்பிடாரம் மண்டல துணைத் தாசில்தார் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9445031363. ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்து செல்போன் எண் 9698952940. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கிழக்கு (31 முதல் 60 ஊராட்சிகள்) பறக்கும்படை அலுவலராக ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9442136266. பசுவந்தனை போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுந்தரவிநாயகம் செல்போன் எண் 9789336846. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us