வன்கொடுமை புகாரில் த.வெ.க., நிர்வாகி நண்பருடன் கைது
வன்கொடுமை புகாரில் த.வெ.க., நிர்வாகி நண்பருடன் கைது
ADDED : ஜூன் 02, 2026 06:29 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த, 35 வயது பெண், த.வெ.க.,வில் உறுப்பினராக உள்ளார். அவருக்கு, துாத்துக்குடி மேற்கு மாவட்ட த.வெ.க., இளைஞரணி துணை செயலர் பாலமுருகன், 35, என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது.
பணி விஷயமாக, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி செல்ல வேண்டும் என, அந்த பெண்ணை, மே, 3ம் தேதி, பாலமுருகன் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
சாயல்குடியை சேர்ந்த ஜெயபால், 35, என்பவரை, தன் நண்பர் என, அவரிடம் அறிமுகம் செய்துள்ளார்.
ஏர்வாடியில் அந்த பெண்ணுக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதில், மயக்க மருந்து கலந்திருந்ததால், அவர் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது.
உடனே, ரிசார்ட் ஒன்றில் அறை எடுத்து தங்கி, இருவரும் அந்த பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, பாலமுருகன், ஜெயபாலை நேற்று கைது செய்தனர்.
