sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்

/

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்


ADDED : ஜூலை 24, 2011 01:19 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த கலெக்டர் செல்வராஜ் நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தூத்துக்குடி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மகேஷ்வரன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கலெக்டராக கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி செல்வராஜ் பொறுப்பேற்றார். மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்தும், தனிநபர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும் துரித நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். பத்திரிக்கைகளில் வரும் பிரச்னை செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த பிரச்னையை களைய உடனுக்குடன் நடவடிக்கையை செல்வராஜ் மேற்கொண்டு வந்தார்.



இந்நிலையில் நேற்று திடீரென தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் ஆஷிஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ்குமார் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 31வது வயதுடைய இளம் கலெக்டரான இவருக்கு மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 46வது கலெக்டராக நியமிக்கப்பட்ட ஆஷிஷ்குமார் பணியேற்ற ஒன்றரை மாதத்தில் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.










      Dinamalar
      Follow us