sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை :நகராட்சி கமி­ஷனர் எச்சரிக்கை

/

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை :நகராட்சி கமி­ஷனர் எச்சரிக்கை

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை :நகராட்சி கமி­ஷனர் எச்சரிக்கை

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை :நகராட்சி கமி­ஷனர் எச்சரிக்கை


ADDED : ஜூலை 28, 2011 01:24 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் போது குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சி எடுப்பதால் ஒரு சில பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கப்பெறவில்லையென பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆகையால் இதுமுதல் குடிநீர் இணைப்பிலிருந்து நேரடியாக மின்மோட்டார் பொரு த்தி குடிநீர் உறிஞ்சி எடுப்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனை த்து வார்டுகளிலும் ஆய்வின் போது மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பினை துண்டிப்பு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மே லும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us