sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கயத்தாறில் உண்ணாவிரதம் இருந்த காங்., மாவட்ட செயலாளர் கைது

/

கயத்தாறில் உண்ணாவிரதம் இருந்த காங்., மாவட்ட செயலாளர் கைது

கயத்தாறில் உண்ணாவிரதம் இருந்த காங்., மாவட்ட செயலாளர் கைது

கயத்தாறில் உண்ணாவிரதம் இருந்த காங்., மாவட்ட செயலாளர் கைது


ADDED : ஆக 15, 2011 01:18 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கயத்தாறு : கயத்தாறில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த காங்., மாவட்ட செயலாளரை கயத்தார் போலீசார் கைது செய்தனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரளிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய மதிமுக.,பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன், கலை உலக அமைப்பாளர் இன்குலாப் மற்றும் நாம் தமிழர் சீமான் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி காங்.,கட்சி மாவட்ட செயலாளர் அய்யலுசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வளாகம் முன்பு நேற்று காலை உண்ணாவிரதம் இருந்தார்.

உடனே கயத்தாறு இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த அய்யலுசாமியை கைது செய்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். தகவலறிந்து மாவட்ட தலைவர் கதிர்வேல் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கயத்தாறு நகர தலைவர் வேலுதாஸ், மாவட்ட துணை தலைவர் முருகன், கடம்பூர் நகர செயலாளர் ஜெகதீசன், கோவில்பட்டி நகர செயலாளர் ராஜகோபால் மற்றும் மாவட்ட பொது செயலாளர் ஆழ்வார்சாமி ஆகியோர் உடனிருந்தனர். பேச்சுவார்த்தையில் மாலை 4 மணிக்கு மேல் ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதம் முடிக்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us