sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்

/

பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்

பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்

பைக் கொள்ளையர்கள் கைது 22 பைக்குகள் பறிமுதல்


ADDED : அக் 07, 2011 02:17 AM

Google News

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிரபல பைக் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.6லட்சம் மதிப்புள்ள 22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பைக்குகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பைக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக எஸ்பி.,நரேந்திரன் நாயர் உத்திரவின் பேரில் ஏடிஎஸ்பி.,சாமித்துரை, ரூரல் டிஎஸ்பி., ஜெய்குமார் ஆலோசனையில் இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன், தனிப்படை இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



தனிப்படையினர் பல்வேறு இடங்களில் பைக்கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் தூத்துக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கொள்ளையர்கள் 4 பேர் குறித்த தகவல் தனிப்படைக்கு கிடைத்தது. தகவலின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏரல் அகரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சண்முகசுந்தரம் என்ற சுரேஷ்(22), அதேபகுதியைச் சேர்ந்த துரைபாலன் மகன் பாலமுருகன்(25), தங்கத்துரை மகன் கார்த்திக்(27) மற்றும் இடையர்காட்டை சேர்ந்த குணசிங் மகன் டேவிட்(27), என்பதும், அவர்கள்தான் பைக்குகளை திருடியது என்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் பிடிபட்ட கொள்ளையர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமார் ரூ,6 லட்சம் மதிப்புள்ள 22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.










      Dinamalar
      Follow us