/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் அறிவியல் முகாம் துவக்கம்
/
தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் அறிவியல் முகாம் துவக்கம்
தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் அறிவியல் முகாம் துவக்கம்
தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் அறிவியல் முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் அறிவியல் முகாம் துவங்கியது.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதற்காவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 'அறிவியல் முகாம் 2011' என்ற முகாம் தூத்துக்குடி வஉசி., கல்லூரியில் துவங்கியது. விழாவிற்கு வஉசி., கல்லூரி முதல்வர் மரகதசுந்தரம் தலைமை வகித்தார். விலங்கியல் துறை பேராசிரியர் எட்வீன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வீரபாகு முகாம் பற்றி விளக்கி பேசினார். கல்லூரியின் செயலாளர் சொக்கலிங்கம் முகாமினை துவக்கி வைத்தார். இயற்பியல் துறை பேராசிரியர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். ஜியாலஜி துறை தலைவர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.
முகாமில் 10ம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் 90 சதவீத மார்க் பெற்றவர்கள், சிபிஎஸ்சி., பாடத்திட்டத்தில் 93 சதவீத மார்க் பெற்றவர்கள், ஐசிஎஸ்சி., பாடத்திட்டத்தில் 92 சதவீத மார்க் பெற்று தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்து வரும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 125 பேர் கலந்து கொண்டுள்ளனர். முகாமில் அறிவியல் துறையை சேர்ந்த கல்வியாளர்கள், பட்நாகர் விருது பெற்றவர்கள், தேசிய மற்றும் உலகளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தமான ஆராய்ச்சி விளக்கங்கள், பாடத்திட்டங்கள், களப்பணி மற்றும் பயிற்சி மூலம் அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர். 5 நாள் முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வீரபாகு மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.