sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி

/

பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி

பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி

பனிமய மாதா பேராலய விழாவில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி


ADDED : ஜூலை 28, 2011 01:15 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று மாலை மாற்றுத் திறனுடையோருக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 429வது ஆண்டு பேராலய பெருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 6.30 மணிக்கு காந்திநகர் பங்கு இறைமக்கள், 7.30 மணிக்கு லூர்தம்மாள்புரம் பங்கு இறைமக்கள், 8.30 மணிக்கு ரத்தினபுரம் பங்கு இறைமக்கள், 9.30 மணிக்கு தஸ்நேவிஸ்மாதா தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 11 மணிக்கு முதியோர்களுக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு எம்.சவேரியார்புரம் மற்றும் முத்தையாபுரம் பங்கு இறைமக்களுக்காவும் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவில் வானகத்தின் திறவுகோல் என்ற தலைப்பில் புன்னைகாயல் பங்குத் தந்தை ஜான் செல்வம் மறையுரையாற்றினார்.



மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6.30 மணிக்கு இனிகோநகர் பங்கு இறைமக்கள், 7.30 மணிக்கு தூய சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், சார்லஸ் திருச்சிலுவை மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் மனையியல் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், 8.30 மணிக்கு அண்ணாநகர், டூவிபுரம் பங்கு இறைமக்கள், 9.30 மணிக்கு தூய அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகள், தஸ்நேவிஸ்மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், 11 மணிக்கு நகர செபக்குழுக்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மாற்றுத்திறனுடையோருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவில் 'விடுதலை பெண்மணி' என்ற தலைப்பில் கடியபட்டிணம் பங்குத் தந்தை செல்வராஜ் மறையுரையாற்றுகிறார். வரும் 31ம் தேதி 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, நற்கருணைப்பவனி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி இரவு அன்னையின் திருவுருவப் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.










      Dinamalar
      Follow us