sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

/

கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கிராமங்களை தேடி அதிகாரிகள் வரும் போது மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்


ADDED : ஆக 12, 2011 12:51 AM

Google News

ADDED : ஆக 12, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : கிராமங்களை தேடி அதிகாரிகள் வருவதால் மக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மனுநீதிநாளில் கோரிக்கை அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி தாலுகா அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் ஆகிய இரண்டு பஞ்.,களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் நேற்று அத்திமரப்பட்டி தங்கபாரதி திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. சப்கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வரவேற்றார். டி.எஸ்.ஓ., பஷீர், சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா, சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் லதா, தாட்கோ மாவட்ட மேலாளர் சோமு, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பகவதி, புதுக்கோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி அன்பு, எஸ்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர் செந்தில், பஞ்., தலைவர் பாரதிதவசிவேல், பாரதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூபாலன், ஆசிரியர் சபரிநாதன், தாசில்தார் கலியுகவரதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் பேசியதாவது; பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது கோரிக்கை மனுக்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே வந்து நேரடியாக பெற்று அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு தான் இதுபோன்ற மனுநீதிநாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி கொண்டு தங்கள் ஊருக்கு தேவையான கோரிக்கை, அடிப்படை வசதிகள் சம்பந்தமாக மனு அளித்து அதற்கான தீர்வினை கண்டு கொள்ளலாம். இது தவிர தனிப்பட்ட முறையில் பட்டா மாற்றம், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். முகாமில் சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையாக இரண்டு நபர்களுக்கு 8 ஆயிரம் மற்றும் விதவை உதவித் தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை 24 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.



நான்கு பேருக்கு ரேஷன் கார்டு, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி 15 நபர்களுக்கு 6 ஆயிரம் வீதம் 90 ஆயிரம், வேளாண்மைத்துறை சார்பில் உதவிகள் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார். விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பாரதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்குரிய லேப்டாப்பில் ரத்தத்தின் பகுதி பொருட்கள், தாவர செல் அமைப்பு போன்றவற்றை லேப்டாப்பில் கலர்படம் மூலம் வரைந்து காட்டினார். அரசு பள்ளி மாணவர்களின் கம்ப்யூட்டர் வளர்ச்சியை கண்டு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். சுகாதாரத்துறை சார்பில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை சார்பில் கண்காட்சியும் முகாமை ஒட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை பி.ஆர்.ஓ., சுரேஷ் தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி தாசில்தார் கலியுகவரதன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us