sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோவில்பட்டியில் போலீஸ் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

/

கோவில்பட்டியில் போலீஸ் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டியில் போலீஸ் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டியில் போலீஸ் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஆக 12, 2011 12:51 AM

Google News

ADDED : ஆக 12, 2011 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : கோவில்பட்டியில் நள்ளிரவு 12 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொள்ள போலீஸ் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டியில் இரவு நேர வியாபாரம் செய்வது குறித்து போலீஸ் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கோவில்பட்டி டிஎஸ்பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் காளிமுத்து தலைமை வகித்தார். டிஎஸ்பி., சிலம்பரசன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து இரவில் கடை நடத்துவது, போலீஸ் பாதுகாப்பு பிரச்னைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடந்தது. இதனடிப்படையில் கோவில்பட்டியில் அனைத்து கடைகளும் இரவு 11.45க்கும் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்குள் கடையை பூட்டவும், மீண்டும் அதிகாலை 4 மணிக்கு திறக்கவும், கடைக்கு வரும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்கவும், கடைக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறும் நபர்கள் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கையின் போது சங்கத்தினர் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளவும் வேண்டுமென தீர்மானம் நிறைவேறியது.










      Dinamalar
      Follow us