sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பொட்டாஷ் உரத்திற்கு பதில் அதே சத்துள்ள உரத்தை பயன்படுத்தலாம்

/

பொட்டாஷ் உரத்திற்கு பதில் அதே சத்துள்ள உரத்தை பயன்படுத்தலாம்

பொட்டாஷ் உரத்திற்கு பதில் அதே சத்துள்ள உரத்தை பயன்படுத்தலாம்

பொட்டாஷ் உரத்திற்கு பதில் அதே சத்துள்ள உரத்தை பயன்படுத்தலாம்


ADDED : ஆக 12, 2011 12:54 AM

Google News

ADDED : ஆக 12, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அதே சாம்பல்சத்து உள்ள மற்ற உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரஞ்சித்சிங் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பொட்டாஷ் உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு தேவையான பொட்டாஷ் உரம் கிடைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பொட்டாஷ் உரத்திற்கு மாற்றாக அதே சத்துள்ள பிற உரங்களை விவசாயிகள் பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரஞ்சித்சிங் தன்ராஜ் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டாஷ் உரங்கள் கிடைக்காத பட்சத்தில் விவசாயிகள் அதற்குரிய அது போன்று சாம்பல்சத்து அளவு கொண்ட பிற கலப்பு உரங்களான 171717, 151515, 161616, 102626, 143514, 142814 ஆகிய உரங்களை பயன்படுத்தலாம். பொட்டாஷ் உரத்தில் உள்ள அதே அளவுள்ள சாம்பல்சத்து இந்த உரங்களிலும் முழுமையாக இருக்கும். இதனால் விவசாயிகள் இதனை மாற்று உரமாக பயன்படுத்தி கொள்ளலாம். இதே போல் டி.ஏ.பி உரம் கிடைக்கவில்லை என்றால் அதே அளவு சத்துக் கொண்ட 20200, 16200,102626 ஆகிய உரங்களை பயன்படுத்தி கொண்டு நல்ல முறையில் விவசாய பணிகளை செய்யலாம். இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்தார். வேளாண்மை அலுவலர் மலர்விழி உடனிருந்தார்.








      Dinamalar
      Follow us