sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டம் : செப்.8ம் தேதி நடத்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் முடிவு

/

ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டம் : செப்.8ம் தேதி நடத்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் முடிவு

ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டம் : செப்.8ம் தேதி நடத்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் முடிவு

ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டம் : செப்.8ம் தேதி நடத்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் முடிவு


ADDED : ஆக 28, 2011 01:02 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டத்தை வரும் செப்.8ம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அகில இந்திய ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்க விருதுநகர் கிளையின் சார்பில் கோவில்பட்டியில் கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு கந்தசாமி தலைமை வகித்தார். சேதுராமன் தீர்மானத்தின்படி குறைந்தபட்ச ஊதிய உயர்வு, தொழிற்சங்க நடவடிக்கைக்கு பழிவாங்கும் போக்கை கைவிடுதல், இடமாற்ற விதிமுறைகளை கடைபிடித்தல், பாதுகாப்பு வழங்குதல், சீருடை மற்றும் தையல் கூலியை பணமாக வழங்குதல் ஆகிய 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்.8ம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன் சிக்னல்களிலும் ரயில்களை 2 நிமிடம் நிறுத்தி அனுப்பும் போராட்டமும் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கதிரவன் நன்றி கூறினார். செயலாளர் பாலசிவகுமார், விருதுநகர் டூ கடம்பூர் வரையுள்ள ஸ்டேஷன்களின் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us