sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

/

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம்


ADDED : செப் 03, 2011 11:25 PM

Google News

ADDED : செப் 03, 2011 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டணம் சுற்றுப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஆறுமுகநேரியில் நேற்று துவங்கியது.

இரவு திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் நடந்தது. ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் 20வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருந்தனர். இதே போன்று 2 அடி முதல் 11 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பாரதிநகர், முத்துகிருஷ்ணாபுரம், ராஜமன்னிபுரம், மடத்துவிளை, கமலாநேரு காலனி, கீழநவலடிவிளை, மூலக்கரை, வடக்கு சுப்பிரமணியபுரம், சீனந்தோப்பு, பூவரசூர், மேலத்தெரு, லெட்சுமி அம்மன் கோயில் தெரு, இலங்கத்தம்மன் கோயில் தெரு, பெருமாள்புரம், சிவன்கோயில் தெரு, காணியாளர் தெரு, பத்ரகாளி அம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை, மன்னராஜாகோயில் தெரு மற்றும் 25 அம்மன் கோயில்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருந்தனர்.

நேற்று மதியம் ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், மூலக்கரை, நாசரேத் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் மெயின்பஜார் செந்தில் விநாயகர் கோயில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்து எழுச்சி பேரணி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு இந்து முன்னணி நகர தலைவர் ராமசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், நகர செயலாளர் கசமுத்து, செந்தில் விநாயகர் கோயில் நிர்வாகி திருமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜன் வரவேற்றார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சண்முகபார்த்தீபன், மாலிகாவர்ஷினி, தூத்துக்குடி மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பஞ்., துணைத்தலைவர் சண்முகசுந்தரம், பக்தஜனசபை செயலாளர் கந்தையா, நகர்நலமன்ற தலைவர் பூபால்ராஜன், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், வைத்தியர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மங்கலகுறிச்சி முத்துசுவாமி அடிகளார் பேரணியை காவி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாலை 4.13 மணிக்கு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் ஜெயின்நகர், பேயன்விளை, லெட்சுமிபுரம் வழியாக ரத்னாபுரி வந்தது. அங்கு காயல்பட்டணம் கணபதீஷ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டணம் பஸ் ஸ்டாப்பை 5.35 மணிக்கு கடந்தது. பின்னர் பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றடைந்தது. நேற்று இரவு திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து கடலில் விஜர்சனம் நடந்தது. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி, காயல்பட்டணம் பகுதியில் மாவட்ட எஸ்.பி., நரேந்திரன்நாயர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.










      Dinamalar
      Follow us