sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி கடலில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்

/

தூத்துக்குடி கடலில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்

தூத்துக்குடி கடலில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்

தூத்துக்குடி கடலில் இன்று விநாயகர் சிலைகள் விஜர்சனம்


ADDED : செப் 03, 2011 11:26 PM

Google News

ADDED : செப் 03, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழா நடக்கிறது.

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டத்திலுள்ள 1 சிலையும், செய்துங்கநல்லூரிலுள்ள 5 சிலைகளும் தாமிரபரணி ஆறு மற்றும் திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. புதியம்புத்தூரில் 3 சிலைகள் தருவை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. ஏரலில் உள்ள 3 சிலைகளை அங்குள்ள தாமிரபரணி ஆற்றிலும், சாயர்புரத்தில் உள்ள 2 சிலைகளை தாமிரபரணி ஆற்றிலும் விஜர்சனம் செய்யப்பட்டது. இதனைப்போல் திருச்செந்தூர் தாலுகாவில் 9 சிலைகளும், திருச்செந்தூர் கோயில் ஒரு சிலையும், ஆறுமுகநேரியில் உள்ள 58 சிலைகளையும், ஆத்தூரில் 3 சிலைகளும், குலசேகரன்பட்டணத்தில் 14 சிலைகளும் திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. மேலும் கயத்தாரில் 1, சாத்தான்குளத்தில் 25, மெஞ்ஞானபுரம் 1, நாசரேத்தில் 8. தட்டார்மடத்தில் 12 சிலைகளும் திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தூத்துக்குடி திலகர் திடல் தபசு மண்டபத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு தூத்துக்குடி சங்குமுக விநாயகர் கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us