sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் தர்ணா

/

சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் தர்ணா

சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் தர்ணா

சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி பிஎஸ்என்எல்., ஊழியர்கள் தர்ணா


ADDED : செப் 15, 2011 11:51 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி பிஎஸ்என்எல்., ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் நடந்தது.

1-1-2011 முதல் பிஎஸ்என்எல்., ஊழியர்கள், அதிகாரிகளின் மெடிக்கல் அலவன்ஸ் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், விடுப்புகால பயணச்சலுகை 5-9-11 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கி வைத்திருப்பதை கண்டித்தும், விடுப்பு கால பயணச் சலுகைக்காக வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு பணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட தொலைத் தொடர்பு பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தர்ணா போராட்டத்தை பிஎஸ்என்எல்., ஊழியர் சங்க தலைவர் பரமசிவம் துவக்கி வைத்தார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் ராமர், சங்கரகுமார், செல்வப்பெருமாள், தனபாலகிருஷ்ணன், பிஎஸ்என்எல்., ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஜெயமுருகன், கிளைச் செயலாளர்கள் ஹரிராமச்சந்திரன், தளவாய்பாண்டியன், சுப்பையா, குணசேகரன், மகேந்திரமணி ஆகியோர் பேசினர். கூட்டு நடவடிக்கை குழுவின் பொருளாளர் பால்ராஜ்பட்டுகுமார் நன்றி கூறினார். தர்ணா போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us