/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தினமும் ஒரு திருக்குறள் படிக்கவேண்டும் எஸ்பி.,அலுவலகத்தில் புதிய ஏற்பாடு

ADDED : செப் 15, 2011 11:51 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி எஸ்பி., அலுவலக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு பல்வேறு வேலை விஷயமாக வருகிறவர்கள் அனைவரும் தினமும் ஒரு திருக்குறள் படிக்கவேண்டும் என்பதற்காக அலுவலக வளாகத்தில் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி எஸ்பி., அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துவருகின்றனர். இதைப்போல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் எஸ்பி., அலுவலகத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் எஸ்பி., அலுவலக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் படிப்பதற்காக தினமும் ஒரு திருக்குறளை வரவேற்பு அறையில் எழுதிப்போட எஸ்பி., நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் முதல் திருக்குறள் எழுதப்பட்டு வருகிறது. மாவட்ட எஸ்பி., தமிழ்மீது பற்றுள்ளவர் என்றும் கூறப்படுகிறது.