sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சார்பதிவாளரை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்

/

சார்பதிவாளரை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்

சார்பதிவாளரை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்

சார்பதிவாளரை கண்டித்து இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 16, 2011 12:00 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தான்குளம் : சாத்தான்குளம் சார்பதிவாளரைக் கண்டித்து இன்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் முத்துலிங்கம், ஒன்றியச் செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வம் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரவேல், மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேலன், ஒன்றிய பொருளாளர் முத்துசுந்தரம் ஆகியோர் பேசினர். சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க ஒரு மணிக்கு மேல் மனுக்கள் வாங்குவதில்லை. ஏஜெண்டு மூலம் சென்றால் எந்த நேரமும் மனுக்கள் கொடுக்கலாம் என செயல்படும் சாத்தான்குளம் சார்பதிவாளர் மீதும் அவருக்கு துணை போகும் மாவட்டப் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி செப்டம்பர் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது.



சாத்தான்குளம் டவுன் மேலரதவீதி, வடக்கு மாடவீதி உட்பட ரதவீதிகளில் போடப்பட்டுள்ள கான்கிரீட் ரோடுகள் மிகவும் தரமற்றதாகப் போடப்பட்டுள்ளது. கலெக்டர் கான்கிரீட் ரோடுகளை ஆய்வு செய்து தரமான ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு காலதாமதமாகும் என்றால் ஒருவழிப்பாதையை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். விநாயகர் சிலை பாதுகாப்புக்கு இருந்த இந்து முன்னணி நிர்வாகிகளிடம் தகாதமுறையில் நடந்து கொண்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பரமசிவம் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us