sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை

/

பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை

பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை

பேய்க்குளம் பகுதியில் ஏக்கர் கணக்கில் நில மோசடி போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை


ADDED : செப் 18, 2011 11:52 PM

Google News

ADDED : செப் 18, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேய்க்குளம், செப்.19 பேய்க்குளம் அருகே நிலமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் வரும் 21ம் தேதி உண்ணாவிரதம் நடக்க உள்ளது.

பேய்க்குளம் அருகே பனைக்குளம் சுற்றுவட்டார பகுதி நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருநபருக்கு விற்பனை செய்துள்ளது குறித்து சமீப காலமாக ஏராளமான புகார்கள் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நிலமோசடியால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சியிலிருந்து இந்த நிலமோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் கருங்கடல் பஞ்.,க்குட்பட்ட பனைக்குளம் பகுதியினைச் சேர்ந்த யாக்கோபு, கோயில்பிள்ளை, பத்சேமாள், தாவீது, தங்கையா, சாமுவேல், பழனியப்பா குப்புசாமி, எட்வர்ட்ஜான், செல்வராஜ் உட்பட ஏராளமான பொதுமக்கள் தங்கள் நிலங்கள் தங்களுக்கு தெரியாமலேயே பறிபோயிருப்பது குறித்து அதிர்ச்சியுடன் புகார் செய்துள்ளனர். நில மோசடியில் ஈடுபட்டவர்கள் நில உரிமையாளர்கள் போட்டோ, பெயர் ஆகியவற்றை மாற்றி போலி பத்திரங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். நிலம் இழந்தவர்களில் ஒரு சிலர் இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இறந்தவர்கள் உயிரோடு சாத்தான்குளம் பத்திர அலுவலகம் வந்து கையெழுத்து போட்டதாக போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்துள்ளனர்.



உதாரணமாக இப்பகுதியை சேர்ந்த கோயில்பிள்ளை, சாமுவேல், இஸ்ரவேல், செல்வராஜ் ஆகியோர் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் கையெழுத்து போட்டதுபோல் போலி பத்திரங்கள் தயார் செய்து நில மோசடி நடந்துள்ளது. இவ்வாறாக படித்தவர்கள் கைநாட்டு போட்டதாகவும், 75வயது உள்ள நபர் போட்டோவில் 20 வயது நபர் போட்டோவும் ஒட்டி மோசடி நடந்துள்ளது. இந்நிலங்கள் அனைத்தையும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா செய்யப்பட்டுள்ளது. இந்த நிலமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சில முக்கிய அரசியல் பிரமுகர் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தடை ஏற்பட்டுள் ளதாகவும் நிலத்தை பறிகொடுத்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலை யில் நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி“ பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வரும் 21ம் தேதி பனைக்குளத்தில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.










      Dinamalar
      Follow us