/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
விளாத்திகுளம் அருகே ஏழை மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா
/
விளாத்திகுளம் அருகே ஏழை மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா
விளாத்திகுளம் அருகே ஏழை மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா
விளாத்திகுளம் அருகே ஏழை மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா
ADDED : செப் 18, 2011 11:52 PM
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே இனாம் சுப்பிரமணியபுரத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். டிஆர்ஓ.,அமிர்தஜோதி வரவேற்றார். விழாவில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது: முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். முதல்வர் தாய்வீட்டுச்சீதனமாக இந்த கறவை மாடுகளை வழங்கியுள்ளார்கள். தாய் வீட்டுச்சீதனத்தை பெற்ற உங்கள் வாழ்க்கை பொருளாதார நெருக்கடி நீங்கி இனிபொற்கால வாழ்க்கையாக அமையும். பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த திட்டத்தை முதல்வர் வழங்கியுள்ளார். இனி வரும் காலங்களில் ஏழை மக்கள் பயன்பெற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் வழங்குவார். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசியதாவது, புதுவீடு கட்டி குடியேறும் போது பசுமாட்டை முதலில் காலடியெடுத்து வைக்க சொல்லுவார்கள். அதுபோல் உங்களுக்கு முதல்வர் உங்கள் வாழ்வு நலம் பெறுவதற்கு பசு மாட்டை வழங்கியுள்ளார். இந்த கறவை மாடு மூலம் உங்கள் வருமானம் பெருகும். உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் வளமடையும் இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கலெக்டர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த இனாம் சுப்பிரமணியபுரத்தில் 26 பயனாளிகளுக்கு கறவை பசு இன்று வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குடும்பத்திற்கு தலைமையேற்கும பெண்களுக்கும், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர் 9லட்சத்து 7 ஆயிரத்து 400 மதிப்புள்ள கறவை மாடுகளை 26 பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்எல்ஏ., மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்., தலைவர் சின்னத்துரை, பஞ்சாயத்து யூனியன் சேர்மன் அமுதவல்லிசெல்வக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெயிலானி, மாவட்ட பஞ்., உறுப்பினர் ஆவுடையம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கெங்கராஜ் நன்றிகூறினார்.

