sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

/

கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி

கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி


ADDED : செப் 28, 2011 12:41 AM

Google News

ADDED : செப் 28, 2011 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி : கோவில்பட்டியில் அதிமுக.,வினருக்கு சீட் கொடுக்காமல் சட்டசபை தேர்தலில் மாற்றுக்கட்சிக்கு வேலை செய்தவர்களுக்கு கவுன்சிலர் சீட் கொடுத்ததை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கையை ஏற்று அவரது மனைவிக்கு சீட் ஒதுக்கி கொடுத்ததால் பரபரப்பு அடங்கியது. கோவில்பட்டி அதிமுக.,வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருப்பவர் சுல்தான். இவர் கோவில்பட்டி நகராட்சியில் மூன்றுமுறை கவுன்சிலராக பதவியில் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிட அதிமுக.,வில் விருப்பமனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் பெண் வேட்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 13வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தனது மனைவி நூர்ஜஹானுக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கோவில்பட்டி நகராட்சியில் எந்த பதவிக்கும் போட்டியிட சுல்தானுக்கோ, அவரது மனைவிக்கோ வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் கோவில்பட்டி சட்டசபை தேர்தலில் அதிமுக.,வை எதிர்த்து நின்ற பிரதான கட்சிக்கு ஆதரவாக வேலை செய்த மற்றும் தேர்தலின்போது அக்கட்சியின் பூத் ஏஜென்டாக வேலை செய்தவருமாக கூறப்படும் ஆரோக்கியராஜ் என்பவரின் மனைவி சுந்தரிக்கு 13வது வார்டு கவுன்சிலராக அதிமுக.,சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அதிமுக.,வின் பல்வேறு நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலனில்லாததால் முன்னாள் கவுன்சிலர் சுல்தான் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார்.



இந்நிலையில் நேற்று காலை கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோட்டிலுள்ள நகர அதிமுக.,அலுவலகம் முன்பு வந்தார். திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் நின்ற அதிமுக.,வினர் சுல்தானை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். எனினும் அவர் சமாதானம் அடையாமல் சம்பவ இடத்திற்கு எம்எல்ஏ.,வரும்வரை தீக்குளிப்பு முயற்சியை கைவிடப்போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். மேலும் இவருடன் தற்போதைய 5வது வார்டு கவுன்சிலர் விமலாதேவி, நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வெள்ளைச்சாமி, கந்தசாமி, ராஜகோபால் ஆகியோரும் தங்கள் தரப்பு அதிருப்தியை வெளிக்காட்ட சுல்தானுடன் ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற சட்டஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படுமென போலீசார் எச்சரிக்கை செய்ததுடன் கட்சி நிர்வாகிகளுடன் பேசி சுமூக தீர்வு எட்டுமாறு அறிவுருத்தியதையடுத்து தீக்குளிப்பு முயற்சி பிரச்னை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து உடலில் மண்ணெண்ணெயுடன் அதிமுக.,நகர அலுவலகத்தில் இப்பிரச்னை குறித்து விவாதம் நடந்தது. மேலும் கட்சி மேலிடத்திற்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தீக்குளிக்க முயன்ற சுல்தான் கூறியதாவது, ஆரம்பகாலத்தில் திராவிட கட்சியில் இருந்து 1972ல் அதிமுக.,துவங்கியதில் இருந்து உழைத்திருக்கிறேன். மூன்று முறை கவுன்சிலராகவும் இருந்துள்ளேன். தற்போது எனக்கு சேர்மன் சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில் எனது மனைவிக்கு கவுன்சிலர் பதவியில் போட்டியிட கேட்டிருந்தும், மாற்றுக்கட்சிக்கு பூத்ஏஜென்டாக இருந்தவரின் மனைவிக்கு சீட் கொடுத்துள்ளனர்.



அதற்கு அதிமுக.,வின் முக்கிய புள்ளிகளும் ஆதரவாக உள்ளனர். கோவில்பட்டி அதிமுக.,வின் குளறுபடிகளை தலைமைக்கு தெரியப்படுத்தும் விதத்தில் தீக்குளிக்க முயன்றேன் தடுத்துவிட்டனர். எனக்கு கிடைக்காவிட்டாலும் கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு கிடைத்திருந்தால் அதற்கு பரிந்துரை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். எனக்கு தற்போது 65 வயதாகிறது. நான் அதிமுக.,வில் இத்தனை ஆண்டுகள் உழைத்துவிட்டு வேறு கட்சிக்கு போகவும் முடியாது, இங்கு நடைபெறும் குளறுபடியால் ஜெ.,வுக்கும், அரசுக்கும் கெட்டபெயர் ஏற்படும் என்பதால் எனது உயிரை இழந்தாவது தலைமைக்கு தெரிய வைக்க வேண்டுமென்று தான் தீக்குளிக்க முயன்றேன் என முன்னாள் கவுன்சிலர் சுல்தான் கூறினார். அப்போது அதிமுக.,நகர செயலாளர் விஜயபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் முத்தையா உட்பட ஏராளமான அதிமுக.,வினர் இருந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தியதைடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13வது வார்டு வேட்பாளர் மாற்றப்பட்டு சுல்தான் மனைவி நூர்ஜஹான் வேட்பாளராக அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கோவில்பட்டி அதிமுக.,நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்த சுல்தான் மீது டவுன் விஏஓ., ராஜசேகரன் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.










      Dinamalar
      Follow us