sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மொபைல் போன் எண், இ-மெயில் முகவரியுடன் வாக்காளர் சேர்க்கை

/

மொபைல் போன் எண், இ-மெயில் முகவரியுடன் வாக்காளர் சேர்க்கை

மொபைல் போன் எண், இ-மெயில் முகவரியுடன் வாக்காளர் சேர்க்கை

மொபைல் போன் எண், இ-மெயில் முகவரியுடன் வாக்காளர் சேர்க்கை


ADDED : ஆக 21, 2011 01:45 AM

Google News

ADDED : ஆக 21, 2011 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதூர் : மொபைல் போன் எண், இ-மெயில் முகவரியுடன் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி நடக்க உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2012க்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 2011 அக்டோபர் முதல் தேதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நவம்பர் முதல் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மனுக்கள் பெறப்படுகின்றது. அக்டோபர் 9,16,23ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது. 2012 ஜனவரி 5ல் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் பங்கேற்றல் என்ற அடிப்படையில் தகுதி உள்ள அனைவரும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். முகவரி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் அவரவர் ஓட்டுச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களின் மொபைல் எண், இ-மெயில் முகவரி சேகரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பித்தால் அந்த படிவத்தில், மொபைல் எண், இ-மெயில் முகவரியை நிரப்பி கொடுக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் படிவம் 6ல் இந்த விபரங்கள் உள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த தகவல்கள், தவறுகளை சரி செய்தல், தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஆகியவை எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும்.






      Dinamalar
      Follow us