sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதலாக 25 சதவீதம் மானியம்

/

சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதலாக 25 சதவீதம் மானியம்

சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதலாக 25 சதவீதம் மானியம்

சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதலாக 25 சதவீதம் மானியம்


ADDED : ஆக 22, 2011 11:33 PM

Google News

ADDED : ஆக 22, 2011 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்துங்கநல்லூர் : சொட்டுநீர் பாசனத்திற்கு 25 சதவீதம் மானியம் கூடுதலாக வழங்க அரசு உத்திரவிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருங்குளம் யூனியனில் சென்னா விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவுக்கு தலைமை வகித்த தூத்துக்குடி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் செய்யது முகமது மிராஞ்சி பேசியதாவது. புதிய அரசு பதவி ஏற்றவுடன் வேளாண்மைத்துறை அமைச்சர் எங்களுக்காக ஒரு கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் நிர்வாகத்தில் நாங்கள் தலையிடமாட்டோம், ஆனால் விவசாயிகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தோட்டக்கலைதுறை மூலம் சொட்டு நீர் பாசனத்திற்கு இதுவரை 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இது இனிமேல் 75 சதவீதமாக வழங்கப்படும். இலவசமாக வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. எனவே விவசாயிகள் சொட்டுநீர்பாசன முறையை கடைபிடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் சரியான இடுபொருளை சரியான அளவில் தரமானதாக வழங்கவேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.



பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள் ஆகியவை காலதாமதாக இதுவரை வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஆடிப்பட்டத்தில் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் காரணமாக அரசு உடனே ஏற்பாடு செய்துள்ளது. 50 சதவீத மானியத்தில் அவைகளை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் அடர் நடவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு வர உள்ளது. தரமான விவசாயம் செய்ய எங்கள் துறை தக்க ஆலோசனை வழங்க உள்ளது. மேலும் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் அதில் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு எந்த நேரத்திலும் எந்த சந்தேகம் மற்றும் உதவிகளை எங்கள் துறை அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us